Tags: Vellai Karisalankanni Powder (வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி) - 100gm
Vellai Karisalankanni Powder (வெள்ளை கரிசலாங்கண்ணி பொடி) - 100gm
₹120.00
கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்ப..
கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை, அதன் வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.
கல்லீரல் செயல்பாட்டின் குறைவினால் ஏற்படும் இரத்த சோகை நோய்க்கு கரிசலாங்கண்ணிச்சாற்றை 100 மில்லியளவு தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் சில தினங்களில் இரத்த சோகை நீங்கி விடும். இரத்தத்தில் உள்ள அமிலத்தன்மை சீராகச் செயல்படும்.
குழந்தைகளுக்கு கரிசலாங்கண்ணிச்சாறு இரண்டு சொட்டில் எட்டு சொட்டு தேன் கலந்து கொடுத்தால் சளித்தொல்லை நீங்கிவிடும். அடிக்கடி சளி ஏற்படுவது குறைந்து குழந்தை ஆரோக்கியமாக இருக்கும்.
பல கொடிய வியாதிகளில் இருந்து பாது காத்துக் கொள்ளலாம். மஞ்சள் காமாலை முதல் அனைத்து வகையான காமாலை நோய்களுக்கும் மிக முக்கியமானது கரிசலாங் கண்ணிக் கீரையாகும்.
கரிசலாங்கண்ணி இலையைப் பறித்து சுத்தம் செய்து நன்றாக அரைத்து இரண்டு சுண்டைக்காய் அளவில் எடுத்து பாலில் கலந்து வடிகட்டி காலை, மாலை சாப்பிட வேண்டும். சிறுவர்களுக்கு மூன்று நாட்கள் கொடுத்தால் போதுமானது. பெரியவர்களுக்கு ஏழு நாட்கள் கொடுக்க வேண்டும். மருந்து சாப்பிடும் காலத்தில் உப்பில்லாப் பத்தியம் இருக்க வேண்டும். நோய் நீங்கிய பின், ஆறு மாதம் வரை எளிதில் செரிக்கும் உணவு சாப்பிட வேண்டும்.
சிறுநீரகம் பாதிப்படைந்து வெள்ளை, வெட்டை நோய் ஏற்பட்டால், இந்நோய்க்கு கரிசலாங்கண்ணி தான் முதன்மையான மருந்தாகும். கரிசலாங்கண்ணிச் சூரணத்தை நான்கு மாசத்துக்கு ஒரு பாகம் திப்பிலிச்சூரணம் சேர்த்து காலை, மாலை ஒரு தேக்கரண்டி தேனில் குழைத்து ஒரு மாத காலம் சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமாவின் தொல்லை குறையும்.
கரிசலாங்கண்ணி கரிசாலை, அரிப்பான் பொற்கொடி போன்ற பெயர்களால் வழங்கப்படுகிறது. கரிசலாங்கண்ணிக் கீரையில் தங்கச் சத்து, இரும்புச்சத்து, வைட்டமின் ‘ஏ’ அதிகம் உள்ளன.
கரிசலாங்கண்ணியை எளிய முறையில் உபயோகித்தாலே பல நன்மைகளை அடையலாம். வாரத்துக்கு இரண்டு நாள், கீரையைச் சமையல் செய்து சாப்பிட்டாலும் இதன் சாற்றை 100 மில்லியளவு சாப்பிட்டு வந்தாலும், உடலுக்கு எந்த நோயும் வராமல் நோய் எதிர்ப்புத் தன்மை உண்டாகும்.